Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/இறைச்சி கடைகளில் சுகாதார துறை ஆய்வு

இறைச்சி கடைகளில் சுகாதார துறை ஆய்வு

இறைச்சி கடைகளில் சுகாதார துறை ஆய்வு

இறைச்சி கடைகளில் சுகாதார துறை ஆய்வு

ADDED : ஜூலை 14, 2011 11:44 PM


Google News

தர்மபுரி: பென்னாகரத்தில் உள்ள இறைச்சி கடைகளில், சுகாதார துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

பென்னாகரம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குப்புசாமி தலைமøயில், பென்னாகரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் முகமது ஹனிபா, சுகாதார ஆய்வாளர்கள் சித்தன், நடராஜ், இளைவரசன், மாதேஷ், கதிரவன் ஆகியோர், இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். பழைய இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகிறாதா, நோய் வாய்ப்பட்ட ஆடு, கோழிகள் அறுக்கப்படுகிறதா, கழிவுகள் கொட்டப்படும் விதம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை செய்ய கடைக்காரர்களுக்கு அறிவுரை வழங்கினார். பழைய இறைச்சிகளை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என, சுகாதார துறையினர் கேட்டு கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us