Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம்

ADDED : ஜூலை 14, 2011 09:32 PM


Google News

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சத்துணவு திட்டத்தின் கீழ், பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும், மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச சீருடைகளை வழங்கப்பட்டு வருகிறது. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் இதில் பயனடைந்து வருகின்றனர். பள்ளி துவங்கிய ஒரு மாதத்திற்குள் வழக்கமாக சீருடைகள் வழங்கப்பட்டு விடும். இவ்வாண்டில் அதற்கான அறிகுறிகளே இல்லை.



மாவட்டங்களில், இலவச சீருடை பெறுவதற்கான மாணவர்கள் பட்டியல் தாயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான துணி அளவுகளும் முன் கூட்டியே தெரிவிக்கப்படும். மாவட்ட சமூக நலத்துறை சார்பில், இப்பணிகள் நடக்கும். அதன் அடிப்படையில் சீருடைகளுக்கான துணிகள் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்படும். அரசு வழங்கும் சீருடை துணிகளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களில் வழங்கி மாணவர்களுக்கு சீருடை தைத்து வழங்கப்படும். இந்நிலையில் இதுவரை சீருடைக்கான துணிகளும் வரவில்லை. சீருடை தேவைக்கான மாணவர் கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. இதனால் சீருடை வழங்குவதில் மேலும் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது.



நமது சிறப்பு நிருபர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us