/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சங்கரன்கோவிலில் நடக்க இருந்தசாலை மறியல் போராட்டம் வாபஸ்சங்கரன்கோவிலில் நடக்க இருந்தசாலை மறியல் போராட்டம் வாபஸ்
சங்கரன்கோவிலில் நடக்க இருந்தசாலை மறியல் போராட்டம் வாபஸ்
சங்கரன்கோவிலில் நடக்க இருந்தசாலை மறியல் போராட்டம் வாபஸ்
சங்கரன்கோவிலில் நடக்க இருந்தசாலை மறியல் போராட்டம் வாபஸ்
ADDED : ஜூலை 13, 2011 01:42 AM
சங்கரன்கோவில்:சங்கரன்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக
மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வரும் 15ம் தேதி நடப்பதாக இருந்த சாலை
மறியல் போராட்டம் சமாதான பேச்சுவார்த்தை மூலம் வாபஸ்
பெறப்பட்டது.சங்கரன்கோவிலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி பஸ் ஸ்டாண்ட் முன் சாலை
மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தாலுகா
அலுவலகத்தில் தாசில்தார் சந்திரசேகர் தலைமையில் சமாதான கூட்டம்
நடந்தது.கூட்டத்தில் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் ஸ்டேஷன் என்.ஜி.ஓ.,
காலனிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் நகர் பகுதியில் புறக்காவல் நிலையம்
அமைப்பது தொடர்பாக கலெக்டருக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சங்கரன்கோவில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள குப்பைகள் வரும் 10
நாட்களில் ஆனையூர் அருகில் உள்ள குப்பை கிடங்குக்கு மாற்றப்படும்.
குருவிகுளம் யூனியன் மலையடிப்பட்டிக்கு செல்லும் வழியில் நிட்சேப நதியில்
பாலம் அமைக்கப்படும். கோமதிமுத்துபுரம் இந்திரா காலனிக்கு தெரு விளக்கு
மற்றும் குடிநீர் பிரச்னைகளை மூன்று நாட்களில் சரி செய்ய நடவடிக்கை
எடுக்கப்படும். கரிவலம்வந்தநல்லூர்- குபேரபட்டணம் தார் சாலை அமைக்க திட்ட
மதிப்பீடு செய்து கலெக்டருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்பன
உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.இதனை தொடர்ந்து வரும் 15ம் தேதி
நடப்பதாக இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர்
இன்பராஜ், மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.