/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கார்-டூவீலர் மோதல் ஒருவர் பரிதாப பலிகார்-டூவீலர் மோதல் ஒருவர் பரிதாப பலி
கார்-டூவீலர் மோதல் ஒருவர் பரிதாப பலி
கார்-டூவீலர் மோதல் ஒருவர் பரிதாப பலி
கார்-டூவீலர் மோதல் ஒருவர் பரிதாப பலி
ADDED : ஜூலை 12, 2011 12:24 AM
மணப்பாறை: வையம்பட்டி அருகே கார் மோதி சைக்கிள் கடைக்காரர் பலியானார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டி அருகேயுள்ள கருங்குளத்தைச்
சேர்ந்தவர் பீட்டர் மரிய ஃபிரான்சீஸ்(58). வையம்பட்டியில் சைக்கிள் கடை
வைத்துள்ள இவர், நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணிக்கு வையம்பட்டி பெட்ரோல்
பங்கில் வண்டிக்கு பெட்ரோல் போட்டுவிட்டு தனது டிவிஎஸ் சுசுகி வண்டியில்
பங்கை விட்டு வெளியே வந்தார். அப்போது கொடைக்கானலில் இருந்து பாண்டிச்சேரி
நோக்கி சென்ற 'இன்னோவா' கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பீட்டர்
மரியபிரான்சீஸ் பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து வையம்பட்டி
இன்ஸ்பெக்டர் அதிவீரராமபாண்டியன் விசாரிக்கிறார்.