/உள்ளூர் செய்திகள்/மதுரை/அ.தி.மு.க., வினரிடம் காங்., கவுன்சிலர் தஞ்சம் : காங்., தலைவருக்கு "வசை'அ.தி.மு.க., வினரிடம் காங்., கவுன்சிலர் தஞ்சம் : காங்., தலைவருக்கு "வசை'
அ.தி.மு.க., வினரிடம் காங்., கவுன்சிலர் தஞ்சம் : காங்., தலைவருக்கு "வசை'
அ.தி.மு.க., வினரிடம் காங்., கவுன்சிலர் தஞ்சம் : காங்., தலைவருக்கு "வசை'
அ.தி.மு.க., வினரிடம் காங்., கவுன்சிலர் தஞ்சம் : காங்., தலைவருக்கு "வசை'
ADDED : ஜூலை 12, 2011 12:17 AM
மதுரை : நிலமோசடியில் அ.தி.மு.க., வினரிடம் ஆதரவு கேட்டு, மதுரை மாநகராட்சி காங்., பெண் கவுன்சிலர் தஞ்சம்
அடைந்தார்.
மாநகராட்சியின் பெண் கவுன்சிலர் ரங்கம்மாள்(காங்.,). மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர். இவருக்கு சொந்தமான நிலத்தை, தி.மு.க.,வினர் சிலர் அபகரித்ததாக கூறப்படுகிறது. மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் உடந்தை. 'தி.மு.க., வினருக்கு ஆதரவாக செயல்படும், காங்., கவுன்சிலர்களிடம் முறையிடுவதால் பிரயோஜனம் இல்லை,' என, ரங்கம்மாள் நினைத்தார். அ.தி.மு.க., எதிர்கட்சி தலைவர் சாலைமுத்துவிடம் தஞ்சம் புகுந்தார். 'தனக்கு உதவுமாறு,' கேட்டுக்கொண்டார். காங்., கவுன்சிலரின் கோரிக்கையை ஏற்று, மன்ற கூட்டத்தில், சாலைமுத்து பேசினார். அ.தி.மு.க., கூட்டணி கட்சி கவுன்சிலர்களும், ரங்கம்மாளுக்கு ஆதரவாக பேசினர். காங்., குழுத்தலைவர் சிலுவை பேசும் போது, வேறொரு விவகாரத்திற்கு, அ.தி.மு.க.,வினரை மறைமுகமாக சாடினார். குறுக்கிட்ட சாலைமுத்து, ''கடந்த ஐந்தாண்டில் சுகாதாரப்பணியில் எத்தனையோ பணியிடம் நிரப்பபட்டுள்ளது. நியமனக்குழுத்தலைவரான நீங்கள் அதற்கு கையெழுத்து போடவில்லை. உங்களை அடிமையாக வைத்திருந்தனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், நீங்கள் இருந்த நிலையை மறக்க வேண்டாம்,'' என்றார்.தொடர்ந்து எழுந்த, மார்க்சிஸ்ட் குழுத்தலைவர் கணேசன், ''பணியாளர் நியமனம் குறித்து உங்களுக்கு எதுவுமே தெரியாது. உங்கள் கட்சி பெண் கவுன்சிலரின் பிரச்னையை, சபையில் பேசுங்கள் பார்க்கலாம்,'' என்றார். அ.தி.மு.க.,வினரின் கோரிக்கையை ஏற்று,'' நிலப்பிரச்னையை விசாரிக்கிறேன்,''என கமிஷனர் செபாஸ்டின் கூறினார்.