/உள்ளூர் செய்திகள்/மதுரை/"நைட்ரஸ் ஆக்சைடு' செலுத்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு ரூ.50 ஆயிரம் : இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவு"நைட்ரஸ் ஆக்சைடு' செலுத்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு ரூ.50 ஆயிரம் : இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவு
"நைட்ரஸ் ஆக்சைடு' செலுத்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு ரூ.50 ஆயிரம் : இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவு
"நைட்ரஸ் ஆக்சைடு' செலுத்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு ரூ.50 ஆயிரம் : இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவு
"நைட்ரஸ் ஆக்சைடு' செலுத்தப்பட்ட பெண்ணின் கணவருக்கு ரூ.50 ஆயிரம் : இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவு
மதுரை : நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் 'ஆக்ஸிஜனுக்கு' பதிலாக 'நைட்ரஸ் ஆக்சைடு' செலுத்தப்பட்டதால், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கோமா நிலையிலுள்ள ருக்மணியின் (34) கணவர் கணேசனுக்கு(45) ரூ.50 ஆயிரம் இடைக்கால இழப்பீடு ஜூலை 18க்குள் வழங்கும்படி, சுகாதார துறை செயலாளருக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவிட்டது.
நேற்று மனு நீதிபதி ஆர்.சுதாகர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கணேசன் நேரில் ஆஜரானார். சென்னை நிபுணர்களின் சீலிடப்பட்ட அறிக்கையை அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார், மயக்கவியல் நிபுணர் திருநாவுக்கரசு தாக்கல் செய்தனர். அறிக்கையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது இருந்ததை விட ருக்மணியின் உடல் நலம் சற்று தேறியுள்ளது. தொடர்ந்து இதே முறையில் சிகிச்சை அளித்தால், உடல் நிலை தேற வாய்ப்புள்ளது, என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் வக்கீல்கள் அழகுமணி, ''மனுதாரருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். தங்க வசதி செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்,'' என்றார். இதுகுறித்து கூடுதல் அட்வகேட் ஜெரனல் கே.செல்லப்பாண்டியன், அரசு சிறப்பு பீளிடர் கோவிந்தனிடம் நீதிபதி விசாரித்தார்.
பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''சுகாதார துறை செயலாளர், மனுதாரருக்கு இடைக்கால இழப்பீடு ரூ.50 ஆயிரத்தை ஜூலை 18 அல்லது அதற்கு முன் குமரி மாவட்ட கலெக்டர் மூலம் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.