/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கண்மாய்க்கு செல்லும் கால்வாய் மீது கடைகள் ஆக்கிரமிப்பு : மழை நீர் செல்ல நடவடிக்கை தேவைகண்மாய்க்கு செல்லும் கால்வாய் மீது கடைகள் ஆக்கிரமிப்பு : மழை நீர் செல்ல நடவடிக்கை தேவை
கண்மாய்க்கு செல்லும் கால்வாய் மீது கடைகள் ஆக்கிரமிப்பு : மழை நீர் செல்ல நடவடிக்கை தேவை
கண்மாய்க்கு செல்லும் கால்வாய் மீது கடைகள் ஆக்கிரமிப்பு : மழை நீர் செல்ல நடவடிக்கை தேவை
கண்மாய்க்கு செல்லும் கால்வாய் மீது கடைகள் ஆக்கிரமிப்பு : மழை நீர் செல்ல நடவடிக்கை தேவை
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் இருபுறமும் உள்ள கால்வாய்களின் மீது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டடுள்ளதால் மழை நீர் செல்ல முடியாமல் உள்ளது.
மழை காலங்களில் ஓடைகள் வழியாக மழைநீர் செல்ல முடிவதில்லை. மேலும், கால்வாய்கள் அடைபட்டுள்ளதால், புறநகர் பகுதி வீடுகளிலிருந்து வரும் கழிவு நீர் மற்றும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அங்கு கொட்டப்படுகின்றன. தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு நோய்பரவும் அபாயம் உள்ளது. கழிவுகளை உண்ண வரும் பன்றிகள், நாய்கள் அங்கும் இங்கும் ஓடி வாகனங்களில் மீது மோதி விபத்தை உண்டாக்குகிறது.ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது: மதுரை ரோடு ஓடை பகுதியில் அதிகபட்ச ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை அகற்ற அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க உள்ளோம். கூடிய விரைவில் அகற்றப்படும், என்றார்.