ADDED : ஜூலை 11, 2011 10:43 PM
மஞ்சூர் : நீலகிரி தேயிலை விவசாயிகளின் முக்கிய பிரமுகர்கள் வரும் 25ம் தேதி முதல்வரை சந்திக்க சென்னை செல்கின்றனர்.
நீலகிரி தேயிலை விவசாயிகளின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் நோக்கில், உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன் மாநில முதல்வரிடம் பேசியுள்ளார்.இது குறித்து விவசாயிகளிடம் தெரிவிக்கும் கூட்டம், மஞ்சூர் எச்.கே.,டிரஸ்ட் கட்டடத்தில் நடந்தது.இதில், முதல்வரிடம் தெரிவிக்க உள்ள கருத்துக்கள் குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. உணவுத்துறை அமைச்சர் பேசுகையில், ''நீலகிரி தேயிலையின் பிரச்னை குறித்து பேச வரும் 25ம் தேதி, முதல்வரை சென்னையில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் பிரமுகர்கள் தேயிலை பிரச்னைகளை தெளிவாக எடுத்து கூற உள்ளனர்,'' என்றார். கூட்டத்தில் தேயிலை விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.