Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மலை மாவட்டத்தில் புதிய பஸ்களை இயக்க மாநில அமைச்சர் உறுதி

மலை மாவட்டத்தில் புதிய பஸ்களை இயக்க மாநில அமைச்சர் உறுதி

மலை மாவட்டத்தில் புதிய பஸ்களை இயக்க மாநில அமைச்சர் உறுதி

மலை மாவட்டத்தில் புதிய பஸ்களை இயக்க மாநில அமைச்சர் உறுதி

ADDED : ஜூலை 11, 2011 10:42 PM


Google News

குன்னூர் : 'நீலகிரியில் புதிதாக 100 புதிய பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என உணவுத் துறை அமைச்சர் புத்திச்சந்திரன் கூறினார்.

நீலகிரியில் அரசு பஸ்களின் பற்றாக்குறையை கண்டித்து குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் குன்னூர் வி.பி., தெருவில் நேற்று முன்தினம் காலை 10.00 மணிக்கு உண்ணாவிரதம் துவங்கியது. போராட்டத்தில், பொது மக்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தது. குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. கூட்டம் குறைவாக இருப்பினும், கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஒவ்வொருவரும் அரசு பஸ்களின் பற்றாக்குறையால் மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் படும் சிரமத்தை உணர்வுப்பூர்வமாக விளக்கினர். இந்நிலையில், மாலை 3.30 மணிக்கு, மாநில உணவுத் துறை அமைச்சர் புத்திச்சந்திரன், உண்ணாவிரத மேடைக்கு வந்து, கோரிக்கையை கேட்டறிந்தார். அவர் பேசுகையில், ''கடந்த தி.மு.க., ஆட்சியின் நிர்வாக சீர்கேடால், போக்குவரத்து துறையில் 6,000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சமவெளி பிரதேசங்களில் ஓடிய பஸ்கள் நீலகிரியில் இயக்கப்படும் நிலையை மாற்றி, மாவட்டத்துக்கு 100 புதிய பஸ்களை வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,'' என்றார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஜூஸ் கொடுத்து, போராட்டத்தை முடித்து வைத்தார். இதற்கு நுகர்வோர் பாதுகாப்பு சங்க துணை தலைவர் ரமணி தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பெள்ளி துவக்கி வைத்தார். நிறைவு நிகழ்ச்சியில், குன்னூர் ஒன்றிய அ.தி.மு.க., செயலர் கலை செல்வன் உட்பட பலர் இருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us