/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சாக்கடை மட்டுமே ஓடும் பிச்சைக்காரன் பள்ளம் சுத்திகரிப்பு நிலையமும் செயலிழப்புசாக்கடை மட்டுமே ஓடும் பிச்சைக்காரன் பள்ளம் சுத்திகரிப்பு நிலையமும் செயலிழப்பு
சாக்கடை மட்டுமே ஓடும் பிச்சைக்காரன் பள்ளம் சுத்திகரிப்பு நிலையமும் செயலிழப்பு
சாக்கடை மட்டுமே ஓடும் பிச்சைக்காரன் பள்ளம் சுத்திகரிப்பு நிலையமும் செயலிழப்பு
சாக்கடை மட்டுமே ஓடும் பிச்சைக்காரன் பள்ளம் சுத்திகரிப்பு நிலையமும் செயலிழப்பு
ADDED : ஜூலை 14, 2011 01:28 AM
ஈரோடு : ஈரோடு - பவானி மெயின்ரோட்டில் உள்ள பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் சாக்கடை கழிவு நீர் மட்டுமே ஓடுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
வீரப்பன்சத்திரம் நகராட்சி பகுதியில் பிச்சைக்காரன் பள்ளம் ஓடை அமைந்துள்ளது. எல்.பி.பி., வாய்க்காலின் உபரி நீர் மற்றும் சூளை, ஆர்.என்.புதூர், பி.பி.அக்ரஹாரம் பகுதி மழை நீர் வடிந்து செல்வதற்காக இந்த ஓடை அமைக்கப்பட்டது. இப்போது, சூளை பகுதியில் துவங்கி, இப்பகுதி வரையிலான வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பை கலந்து, ஓடை முழுவதுமாக சாக்கடை நீரும், பிளாஸ்டிக் கழிவுமாக குவிந்துள்ளது. பி.பி. அக்ரஹாரம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை, மாடு, ஆடு, கோழி இறைச்சி கடை கழிவு ஆகியவை இந்த ஓடையில் சங்கமிக்கிறது. வைராபாளையம் அருகே இந்த ஓடை அப்படியே காவிரியில் சேர்கிறது. பல ஆண்டுகளாக ஓடையில் தேங்கிய சாக்கடை கழிவு மற்றும் குப்பையை அகற்றும் வகையில், ஓடையை தூர்வார, வீரப்பன்சத்திரம் நகராட்சி எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், ஓடையில் இரண்டு கி.மீ., நீளத்துக்கு 500 லோடு அளவுக்கு கழிவு தேங்கியுள்ளது. பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் வரும் தண்ணீர் மற்றும் சாக்கடை கழிவு நீரை, குழாய் மூலம் எடுத்துச் சென்று, சுத்திகரித்து, அதன் பின் காவிரியில் விடும் வகையில், வைராபாளையம் பகுதியில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் மூடிக் கிடக்கிறது. பவானி மெயின்ரோட்டில் உள்ள பிச்சைக்காரன் பள்ளம் பாலத்தின் அடியில், ஓடையை ஆக்கிரமித்து பட்டி அமைத்து, நூற்றுக்கணக்காகன பன்றிகளை வளர்க்கின்றனர். இதனால், அரை கி.மீ., தூரத்துக்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. வாகனங்களில் பாலத்தை கடக்கும் போது அடிக்கும் துர்நாற்றத்தால், வாந்தியெடுக்கும் நிலை ஏற்படுகிறது. இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், குடியிருப்புகள் அதிக அளவில் இருந்த போதிலும், மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்க நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சர், எம்.எல்.ஏ., கலெக்டர் மற்றும் மாநகராட்சி என அனைவரிடமும் இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து விட்டனர். ஆனால், எந்தவித பயனும் இல்லை.


