Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்

நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்

நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்

நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்

ADDED : ஜூன் 19, 2025 09:25 AM


Google News
Latest Tamil News
'ஜி - 7' மாநாட்டுக்கு வந்த, ஐரோப்பிய நாடான, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அவரை சந்தித்ததும் மகிழ்ச்சி பொங்க கைகுலுக்கிய மெலோனி, 'நீங்கள் தான் 'பெஸ்ட்'; உங்களைப் போல மாற நான் முயற்சி செய்கிறேன்' என, கூறி சிரித்தார்.

அப்போது, பிரதமர் மோடியும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பொதுவாக, மோடி - மெலோனி சந்திப்பு இணையத்தில் எப்போதும் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இருவர் பெயரையும் இணைத்து 'மெலோடி' என்ற 'ஹேஷ்டேக்' உடன் வேகமாக பரவி வருகிறது.

மோடி - மார்க் கார்னி பேச்சு; தூதர்களை நியமிக்க ஒப்புதல்!

வட அமெரிக்க நாடான கனடாவில் நடந்த, 'ஜி - 7' மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னியுடன் நேற்று பேச்சு நடத்தினார். காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில், இரு நாடுகள் இடையிலான உறவு மோசமடைந்த நிலையில், அதை மேம்படுத்தும் வகையில் இந்த பேச்சு அமைந்தது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கனடா பிரதமர் மார்க் கார்னியை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள இரு நாட்டு உறவுகளை மீட்டெடுப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இரு தரப்பிலும் தூதரக அதிகாரிகளை நியமிப்பதற்கு இந்த சந்திப்பில் ஒப்புதல் மேற்கொள்ளப்பட்டது. ஜனநாயக மதிப்புகள், சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா - கனடா உறவுகளின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை குறித்து கேள்வி எழுப்பினீர்களா என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, 'இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு உட்பட்டு உள்ளதால், அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது' என, கார்னி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us