ADDED : செப் 28, 2011 01:18 AM
மதுரை : திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மில் தொழிலாளி
கருத்தபிள்ளை, 90.
இவர், நேற்று காலை 11 மணிக்கு திருப்பரங்குன்றம் ரயில்
தண்டவாளத்தை கடக்க முயன்றார். இவர் மீது மதுரை நோக்கி வந்த குருவாயூர்
எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலியானார். ரயில்வே இன்ஸ்பெக்டர் ராவணன்,
எஸ்.ஐ., செல்வகுமாரி விசாரிக்கின்றனர்.