ADDED : ஜூலை 13, 2011 01:12 AM
திருக்கோவிலூர் : பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இருவர் மீது போலீசார்
வழக்குப் பதிந்தனர்.
திருக்கோவிலூர் அடுத்த விளந்தை கிரமத்தைச் சேர்ந்த
மாயவன் மகன் முருகன் (37). இவர் பெங்களூரூவில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி விளந்தை கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்தபோது, அதே ஊர்
காலனியை சேர்ந்த ஏழுமலை மகன்கள் அசோக்குமார், உதயகுமார் இருவரும் தகாத
முறையில் நடக்க முயன்றனர். இதனை தட்டிக் கேட்ட முருகனை திட்டி கொலை
மிரட்டல் விடுத்தனர்.மணலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து அசோக்குமார்,
உதயகுமாரை தேடி வருகின்றனர்.