/உள்ளூர் செய்திகள்/மதுரை/சம்பளம் நிறுத்தத்தால் போலீசார் குடும்பத்தில் பிரச்னைசம்பளம் நிறுத்தத்தால் போலீசார் குடும்பத்தில் பிரச்னை
சம்பளம் நிறுத்தத்தால் போலீசார் குடும்பத்தில் பிரச்னை
சம்பளம் நிறுத்தத்தால் போலீசார் குடும்பத்தில் பிரச்னை
சம்பளம் நிறுத்தத்தால் போலீசார் குடும்பத்தில் பிரச்னை
ADDED : ஜூலை 24, 2011 11:49 PM
மதுரை : மதுரை நகர் ஆயுதப்படையில் 40 பேருக்கு, ஜூன் மாதத்திற்குரிய சம்பளம் வழங்கப்படாததால், குடும்பத்தில் பிரச்னை ஏற்படுவதாக போலீசார் புலம்புகின்றனர்.
சிவகங்கை மாவட்ட ஆயுதப்படையில் இருந்து 40 போலீசார், கடந்த மே 31ல் மதுரைக்கு இடமாற்றப்பட்டனர். பணியில் சேர்ந்த இவர்களுக்கு ஜூன் மாதத்திற்குரிய சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. போலீசார் கூறுகையில், 'சம்பளம் வழங்கப்படாததால் குடும்பத்தினர் எங்கள் மீது சந்தேகம் கொள்கின்றனர். இதனால் தினமும் பிரச்னை ஏற்படுகிறது. சம்பளம் வழங்கப்படாதது குறித்து அமைச்சு பணியாளர்களிடம் கேட்டால், ஏதாவது ஒரு காரணத்தை கூறி தட்டிக்கழிக்கின்றனர். அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை,' என்றனர்.


