பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்: சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு
பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்: சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு
பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்: சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு
ADDED : செப் 01, 2025 04:22 PM

புதுடில்லி: தமிழக பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமனை நியமித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
தமிழக போலீஸ் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் நேற்று ஓய்வு பெற்றார். இவரது ஓய்வுக்கு பின், டிஜிபி அலுவலகத்தில் நிர்வாக பிரிவு டிஜிபியாக பணியாற்றிய வெங்கட்ராமனை, பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசு நியமித்தது.
இந்நிலையில், இதனை எதிர்த்து பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பின் ஹென்றி திபேன் சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில் கூறியுள்ளதாவது: டிஜிபி நியமனத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. டிஜிபி பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு யுபிஎஸ்சிக்கு அரசு டிஜிபி பதவிக்கு தகுதியானவர்களின் பரிந்துரை பட்டியலை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு பட்டியல் அனுப்பாதது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. நீதிமன்ற உத்தரவை மீறி பொறுப்பு டிஜிபியை தமிழக அரசு நியமித்துள்ளது. இவ்வாறு அந்த மனுவில் ஹென்றி திபேன் கூறியுள்ளார்.