Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ஒன்பது பவுன் நகை பெண்ணிடம் "அபேஸ்'

ஒன்பது பவுன் நகை பெண்ணிடம் "அபேஸ்'

ஒன்பது பவுன் நகை பெண்ணிடம் "அபேஸ்'

ஒன்பது பவுன் நகை பெண்ணிடம் "அபேஸ்'

ADDED : செப் 16, 2011 12:13 AM


Google News

தஞ்சாவூர்: பஸ்ஸில் சென்ற பெண்ணிடம் ஒன்பது பவுன் நகைகளை நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடுகின்றனர்.

பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையை சேர்ந்த சந்திரமோகன் மனைவி கலைராணி (29). கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் நடந்த உறவினர் வீட்டுக்கு விசேஷத்துக்கு சென்றார். நேற்று முன்தினம் அங்கிருந்து தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்ட் வந்தார். கிளம்பும்போது முன்னெச்சரிக்கையாக கழுத்தில் போட்டிருந்த நகைகளை கழற்றி, மணிபர்ஸில் வைத்து கொண்டார். திருப்பாலைத்துறைக்கு செல்லும் பஸ்சில், கூட்டத்தோடு கூட்டமாக நெருக்கி கொண்டு டவுன் பஸ்சில் ஏறினார். கூட்ட நெரிலில் சென்ற கலைராணி, பஸ் டிக்கட் எடுக்க மணி பர்ஸை எடுத்தார். அப்போது, மணி பர்ஸில் இருந்த ஒன்பது பவுன் நகைகள் மட்டும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து கலைராணி கொடுத்த புகாரின்பேரில், தஞ்சை மேற்கு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us