சிறுமி விபசார வழக்கில்பெண் புரோக்கர் சரண்
சிறுமி விபசார வழக்கில்பெண் புரோக்கர் சரண்
சிறுமி விபசார வழக்கில்பெண் புரோக்கர் சரண்
ADDED : ஆக 03, 2011 01:28 AM
ராமநாதபுரம்;மதுரை திருமங்கலம் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில், காரைக்குடி புரோக்கர் ருக்மணி, கோர்ட்டில் சரணடைந்தார்.மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி ஈஸ்வரி,17, (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவரை விபசார கும்பல், கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் கைமாற்றி முக்கிய பிரமுகர்களுக்கு விருந்தாக்கியது.சிறுமி, ராமநாதபுரம் மகளிர் போலீசில் கொடுத்த புகாரின்படி, ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் ஜலீல் உட்பட, 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.வழக்கில் தொடர்புள்ள காரைக்குடியைச் சேர்ந்த ருக்மணி, 55, என்பவர் நேற்று, ராமநாதபுரம் ஜே.எம்.2 கோர்ட்டில் சரணடைந்தார். மாஜிஸ்திரேட் பாஸ்கரன், ருக்மணியை திருச்சி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.