புதுச்சேரி:மின் துறை ஊழியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
நடந்தது.புதுச்சேரி மின் துறை தெற்கு நகர மத்திய பிரிவில் பணி புரிந்த உதவி
மின் ஆய்வாளர் சதாசிவம் பணி நிறைவு பெற்றதையொட்டி, அவருக்குப் பாராட்டு
விழா நடந்தது.செயற்பொறியாளர் முரளி, உதவிப் பொறியாளர் விஜயகுமார், இள
நிலைப் பொறியாளர் மோகன், செல்வராஜ் ஆகியோர் சதாசிவத்திற்கு நினைவு பரிசு
வழங்கி பாராட்டினர்.