Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மின்சாரத்தை மிச்சப்படுத்த மின்வாரியம் நடவடிககை

மின்சாரத்தை மிச்சப்படுத்த மின்வாரியம் நடவடிககை

மின்சாரத்தை மிச்சப்படுத்த மின்வாரியம் நடவடிககை

மின்சாரத்தை மிச்சப்படுத்த மின்வாரியம் நடவடிககை

UPDATED : ஜூலை 13, 2011 05:42 PMADDED : ஜூலை 13, 2011 02:06 AM


Google News
அவிநாசி : அவிநாசி அரசு பள்ளியில் மின் சிக்கனவிழிப்புணர்வு முகாம் நடந்தது.அவிநாசி கோட்ட மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், மின் சிக்கன விழிப்புணர்வு முகாம், அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

தலைமை ஆசிரியர் சரவணபவன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுமதி வரவேற்றார்.

திருப்பூர் கோட்ட உதவி செயற்பொறியாளர் (சிறப்பு பராமரிப்பு பிரிவு) ராஜாமணி பேசியதாவது: உற்பத்திக்கும், பயன்பாட்டுக்கும் எப்போதும் நீண்ட இடைவெளி இருக்கும். அது, மின் சக்திக் கும் பொருந்தும். மின்சாரத்தை தேவைப்படும் சமயங்களில் மட்டுமே செலவழிக்க வேண்டும். உலகை அச்சுறுத்தி வரும் புவி வெப்பமயமாதல் பிரச்னைக்கு உரிய தீர்வாக, ஒவ்வொரு மாணவரும் மரக்கன்று வளர்க்க வேண்டும். மத்திய அரசின் கீழ் இயங்கும் ஆற்றல் துறை அமைச்சகம், மின்னாற்றலை உருவாக்கும் பல்வேறு முறைகளை ஆராய்ந்து, அதை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள 1.85 கோடி மின் இணைப்புகளில் பயன்படுத்தப்படும் குண்டு பல்புகளை ஒழித்தால், 1,600 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும். இதன் மூலம் தமிழகம் தன்னிறைவான மாநிலமாக உருவெடுக்கும், என்றார். அவிநாசி கோட்ட செயற்பொறியாளர் பொன்மூர்த்தி, மரம் வளர்ப்பதன் அவசியம், மின் சிக்கனம் குறித்து பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us