/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலத்தில் "ஸ்டாக்' வைத்து மாட்டு இறைச்சி விற்பனைசேலத்தில் "ஸ்டாக்' வைத்து மாட்டு இறைச்சி விற்பனை
சேலத்தில் "ஸ்டாக்' வைத்து மாட்டு இறைச்சி விற்பனை
சேலத்தில் "ஸ்டாக்' வைத்து மாட்டு இறைச்சி விற்பனை
சேலத்தில் "ஸ்டாக்' வைத்து மாட்டு இறைச்சி விற்பனை
ADDED : ஆக 01, 2011 04:14 AM
சேலம்: ஆட்டையாம்பட்டியில் மாட்டு இறைச்சி விற்பனை செய்வோர், கழிவுகளை
தேக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
நாள்பட்ட
கழிவுகளால், பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது.இது குறித்து மாவட்ட
கலெக்டர் மகரபூஷணத்துக்கு, பொதுமக்கள் அனுப்பிய மனு விபரம்:
ஆட்டையாம்பட்டி தானக்குட்டிப்பாளையம் ஸ்டாலின் நகர் பகுதியில், 300க்கும்
மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில்,
ஐந்துக்கும் மேற்பட்ட மாட்டு இறைச்சி கடைகள் உள்ளது. அந்த கடைகளுக்கு,
இளம்பிள்ளை, வெண்ணந்தூர், மல்லசமுத்திரம் பகுதிகளில் இறக்கும் மாடு, எருமை
போன்றவற்றை மிகக்குறைந்த விலைக்கு வாங்கி வருகின்றனர். அதில் உள்ள கறி,
எலும்பு மற்றும் கழிவுப் பொருட்களை பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலே
சேர்த்து வைக்கின்றனர்.கறியையும், எலும்பையும் காயவைத்து
வெளிமாநிலங்களுக்கு சிலர் விற்பனை செய்கின்றனர். பயங்கர துர்நாற்றத்தால்,
அப்பகுதியில் உள்ள குழந்தைகள், முதியோர் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
ஆட்டையாம்பட்டி போலீஸில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.
கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.