ஐதராபாத் : சாம்பியன்ஸ் லீக் 'டுவென்டி-20' தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள், ஐதராபாத்தில் நடக்கின்றன.
கோல்கட்டா அணிக்கு காலிஸ், பிஸ்லா இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில், பிஸ்லா(45) வெளியேறினார். அடுத்து வந்த யூசுப் பதான்(12) ஏமாற்றினார். இதற்கு பின் விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. கோல்கட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டும் எடுத்தது.
ஆக்லாந்து அணிக்கு, முதல் பந்திலேயே ரன் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார் கப்டில்(0). யூசுப் பதான் வீசிய போட்டியின் 10வது ஓவரில் ஜிம்மி ஆடம்ஸ்(18), குயினி(0) வெளியேற, நெருக்கடி அதிகரித்தது.
கடைசி ஓவரில் ஆக்லாந்து வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட, துல்லியமாக பந்துவீசிய பிரட் லீ 8 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுக்க, ஆக்லாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 'திரில்' வெற்றி பெற்ற கோல்கட்டா அணி 2 புள்ளிகளை பெற்றது.


