Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

தூத்துக்குடி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

தூத்துக்குடி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

தூத்துக்குடி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

ADDED : செப் 01, 2011 11:53 PM


Google News

தூத்துக்குடி : தூத்துக்குடி பகுதியில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோ லகலமாக நடந்தது.

நூற்றுக்கணக்கான விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாநகர பகுதியில் நேற்று திரும்பிய பக்கமெல்லாம் விநாயகர் பாடல்கள் ஒலிபரப்பி விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடந்தது. குறைந்தது ஒரு தெருவிற்கு ஒரு விநாயகர் கோயில் இருக்கிறது. சில தெருக்களில் இரண்டு மூன்று சிறிய விநாயகர் கோயில்கள் உள்ளன. அனைத்து கோயில்களிலும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.காலையிலே விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு அலங்கார தீபாரதனைகள் நடந்தது. தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் விநாயகர் கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. பயணிகள் திரளாக கலந்து கொண்டனர். கந்தசாமிபுரம் பிள்ளையார் கோயிலில் திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இதனை ஒட்டி யாகசால பூஜைகள் போன்றவை நடந்தது. நேற்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் போத்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது. தூத்துக்குடி டூவிபுரம் 3வது தெரு கல்வி விநாயகர் ஆலயத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடந்தது. காலையில் இருந்து தொடர்ந்து சிறப்பு அலங்காரங்கள், தீபாரதனைகள், அபிஷேகங்கள் நடந்தது. கோயில்கள் தவிர விஜர்சனம் செய்வதற்கு ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கு ஆட்ட, பாட்டங்களுடன் சிறப்பு பூஜைகள் அமர்க்களமாக நடந்தது. தூத்துக்குடி சிவன் கோயிலில் உள்ள விநாயகருக்கும், பெருமாள் கோயிலில் உள்ள விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத் துக்குடி டவுனில் மொத்தம் 71 விநாயகர் சிலை கள் பிரதி ஷ்டை செய்யப்பட்டு விநா யகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளில் 54 சிலைகள் வரும் 4ம்தேதி திரேஸ்புரம் கடலிலும், 17 சிலைகள் தெர்மல் கடற்கரையிலும் விஜர்சனம் செய்யப் படுகிறது. இதைப் போல் ரூரல் பகுதியில் மொத்தம் 14 விநா யகர் சிலைகள் பிரதி ஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதில் வரும் 3ம் தேதி தெர்மல் கடற்கரையில் 3 சிலைகளும், தரு வைக்குளம் கடற்கரை யில் 2 சிலைகளும் விஜர்சனம் செய்யப்படுகிறது. வரும் 4ம் தேதி திரேஸ்புரம் கடற்கரை யிலும் தெர்மல் நகர் கடற் கரையில் 6 சிலைகளும் விஜர் சனம் செய்யப்படுகிறது. இதைப்போல் ஸ்ரீவை குண்டம் பகுதியில் 40 விநா யர்கர் சிலைகளும், கோவில் பட்டி, விளாத்திகுளம் பகுதி யில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதி ஷ்டை செய்யப்பட்டு வரும் 3,4 ம் தேதியில் திருச்செந்தூர், வேம்பார் கடற்கரைகளில் விஜர்சனம் செய்ய ஏற்ப õடுகள் செய்யப்பட்டு வருகிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us