சிரியாவில் 4 நாட்களில் 35 பேர் சுட்டுக்கொலை
சிரியாவில் 4 நாட்களில் 35 பேர் சுட்டுக்கொலை
சிரியாவில் 4 நாட்களில் 35 பேர் சுட்டுக்கொலை
ADDED : ஆக 17, 2011 07:12 AM
பெய்ரூட்: சிரியாவில் அதிபருக்கு எதிராக கடந்த 4 நாட்களாக நடந்த கலவரத்தில் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் 35 பேர் பலியாகினர்.
சிரியாவின் முக்கிய கடலோர நகரமான லடாகியா நகரில் கடந்த 4 நாட்களாக அதிபர் பஷீர்அல் ஆசாத்திற்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க ராணுவத்தினரும் முயன்று வருகின்றனர். இந்நிலையில் சிரியா- லெபனான் எல்லையில் கடற்கரை நகரமான லடாகியாநகரில் கடந்த 4 நாட்களாக கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடந்த சண்டையில் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 35 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தும் சிரியா தனது பிடிவாதத்தினை கைவிட மறுக்கிறது. மேலும் அப்பாவி மக்கள் மீது போர்விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்துகிறது என இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹோக் கண்டனம் தெரிவித்துள்ளார்.


