Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு நான்கு பேர் போட்டி

சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு நான்கு பேர் போட்டி

சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு நான்கு பேர் போட்டி

சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு நான்கு பேர் போட்டி

ADDED : ஆக 12, 2011 05:05 AM


Google News

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள அதிபர் பதவிக்கான போட்டியில் நான்கு பேர் போட்டியிட உள்ளனர்.

தற்போதைய அதிபர் நாதனின் பதவிக்காலம் வரும் இம்மாதத்துடன் முடிவடைகிறது.இதனைத்தொடர்ந்து அதிபர் பதவி தேர்வுக்கு போட்டியிடும் நான்கு பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் முன்னாள் துணை பிரதமாராக இருந்த டோனி டானும் ஒருவர். மற்றவர்கள் முறையே இன்சூரன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த டான் கின் லியான், கப்பல் போக்குவரத்தை சேர்ந்த டான் செங்க் போக் மற்றும் மூதலீட்டு துறையை சேர்ந்த இயக்குனர்கோவெட் ஆகியோர் போட்டியிட உள்ளனர். கடந்த 1993-ம் ஆண்டிற்கு பின்னர் இந்த ஆண்டில் தான் அதிபர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் சிங்கப்பூர் சட்டத்தின்படி அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் அரசு பணியில் இருந்திருக்க வேண்டும். அல்லது போட்டியாளர்கள் தங்களது சொத்து மதிப்பில் குறைந்தபட்சம் சிங்கப்பூர் டாலரில் ரூ.100மில்லியன் அளவாவது வைத்திருக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us