/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மாவட்ட செஸ் போட்டி : 33 பள்ளிகள் பங்கேற்புமாவட்ட செஸ் போட்டி : 33 பள்ளிகள் பங்கேற்பு
மாவட்ட செஸ் போட்டி : 33 பள்ளிகள் பங்கேற்பு
மாவட்ட செஸ் போட்டி : 33 பள்ளிகள் பங்கேற்பு
மாவட்ட செஸ் போட்டி : 33 பள்ளிகள் பங்கேற்பு
ADDED : ஜூலை 25, 2011 10:19 PM
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் நடந்த மாவட்ட செஸ் போட்டியில் 33 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
10 வயது மாணவிகள் பிரிவில் சிவகாசியை சேர்ந்த அக்சயா, ஜெயஸ்ரீ, ராஜபாளையத்தை சேர்ந்த சஞ்சிதா, மாணவர்களில் ராஜபாளையத்தை சேர்ந்த ஹரிவர்சன், சிவகாசியை சேர்ந்த ஸ்ரீராம் சக்சினு, ஸ்ரீராம் சுந்தர் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர். 13 வயது மாணவிகள் பிரிவில் ராஜபாளையத்தை சேர்ந்த விஜயலட்சுமி, கீர்த்தனா, ஹரி பிரியா மாணவர்களில் சிவகாசியை சேர்ந்த யோகேஷ்குமார், தங்ககுமார், ராஜபாளையத்தை சேர்ந்த ஹரிகணேஷ் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
15வயது மாணவிகள் பிரிவில் ராஜபாளையத்தை சேர்ந்த விஷ்ணுபிரபா, வசந்தலட்சுமி, தேவி கார்த்திகா, மாணவர்கள் பிரிவில் சிவகாசியை சேர்ந்த சக்திவேல், அருண்குமார், ராஜபாளையத்தை சேர்ந்த சிவஹரிஸ் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர். பின் நடந்த பரிசளிப்பு விழாவில் ஆனந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் ரமணி பரிசு வழங்கினார். ராஜபாளையம் செஸ் கிளப் தலைவர் கோபால்சாமி, செயலாளர் மெய்யப்பன் வாழ்த்தினர். பள்ளி நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் நன்றி கூறினார்.