ADDED : ஆக 29, 2011 11:52 PM
ஊத்தங்கரை : ஊத்தங்கரையில் விருது பெற்ற மாணவனுக்கு பாராட்டு விழா நடந்தது.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் சக்கரவர்த்தி மாவட்டத்தில் சிறந்த ஜே.ஆர்.சி., மாணவராக தேர்வு செய்யப்பட்டு கலெக்டரிடம் விருது பெற்றார். மாணவரை பாராட்டி பள்ளி வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில், விருது பெற்ற மாணவன் சக்கரவர்த்தியையும், சான்றிதழ் பெற்ற மாணவர்களையும், பயிற்றுனர் கணேசனனையும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.