/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மாயம்பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மாயம்
பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மாயம்
பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மாயம்
பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மாயம்
ADDED : ஆக 18, 2011 04:33 AM
புதுச்சேரி : பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனைக் கைதி தலைமறைவானார்.
வினோபா நபர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அபிமன்யூ, 35. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவியைக் கொலை செய்த வழக்கில் டி.நகர் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். அவர் தற்போது ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்து வந்தார். இவர் கடந்த 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை 6 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 15ம் தேதி அபிமன்யூ சிறைக்குச் செல்லாமல் எங்கோ தலைமறைவாகி விட்டார். தகவல் அறிந்த சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். காலாப்பட்டு போலீசார் அபிமன்யூவைத் தேடி வருகின்றனர்.