ADDED : செப் 09, 2011 12:53 AM
ஏரல் : ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூரில் மாயமான பள்ளி மாணவர் குறித்து ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் பூச்சிவிளையை சேர்ந்த அருணாசலம் மகன் முத்துராமலிங்கம் என்ற ராஜா (15). இவர் நாலுமாவடியில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக படிக்காததால் இவரை அவரது தந்தை அருணாசலம் கண்டித்துள்ளார். கடந்த 2ம் தேதி காலையில் பள்ளிக்குச் சென்ற ராஜா அன்று முதல் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள், மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் இதுவரை எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து அருணாசலம் ஏரல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமராஜன் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.