/உள்ளூர் செய்திகள்/தேனி/புதர் மண்டி கிடக்கும் உத்தமுத்து கால்வாய்புதர் மண்டி கிடக்கும் உத்தமுத்து கால்வாய்
புதர் மண்டி கிடக்கும் உத்தமுத்து கால்வாய்
புதர் மண்டி கிடக்கும் உத்தமுத்து கால்வாய்
புதர் மண்டி கிடக்கும் உத்தமுத்து கால்வாய்
ADDED : செப் 06, 2011 10:44 PM
உத்தமபாளையம் : உத்தமபாளையம் உத்தமுத்து கால்வாய், நீண்ட காலமாக தூர் வாரப்படாததால் புதர்மண்டி உள்ளது.
க.புதுப்பட்டி பெரியாற்றிலிருந்து, அனுமந்தன்பட்டி, பைபாஸ் ரோடு வழியாக உத்தமுத்து கால்வாய் பிரிந்து செல்கிறது. இக்கால்வாய் மூலம் தண்ணீர் புதூரில் உள்ள கருவேலம் குளத்தில் தேக்கப்பட்டு விவசாயத்திற்கு திறந்து விடப்படுகிறது. இக்கால்வாயில் முதல் இரண்டு கி.மீ., தூரத்திற்கு ஆக்கிரமிப்பு இல்லை.
உத்தமபாளையம் பைபாசில் இருந்து கருவேலம் குளம் வரை கால்வாய், பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ளது. இதனால் தண்ணீர் வழிந்து வேறுபகுதிகளுக்கு செல்கிறது.பல இடங்களில் புதர் மண்டி முட்புதர்கள் அடர்ந்துள்ளதால், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. புதூர், அம்பாசமுத்திரம் பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுப் பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்