மாணவர்களுக்கு பயன்பாடின்றி பாதுகாக்கப்படும் "லேப்' உபகரணம்
மாணவர்களுக்கு பயன்பாடின்றி பாதுகாக்கப்படும் "லேப்' உபகரணம்
மாணவர்களுக்கு பயன்பாடின்றி பாதுகாக்கப்படும் "லேப்' உபகரணம்
சேலம் : தமிழகத்தில், லேப் வசதி இல்லாத உயர்நிலைப் பள்ளிகளுக்கு, ஆய்வுக்கூட உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு உயர்நிலைப் பள்ளிகளில், இதுவரை, ஆய்வுக்கென தனியாக அறை வசதி ஒதுக்கப்படாமல், 'லேப்' உபகரணங்கள் மட்டுமே, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வழங்கி வருவதால், அவை தலைமை ஆசிரியருக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது.
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் எந்த உயர்நிலைப் பள்ளிக்கும், ஆய்வுக்கூட அறை மற்றும் அதற்கான வசதிகள் செய்து தரவில்லை. ஆனால், திட்ட நிதியில் பணம் வருகிறது என்பதற்காக, அனைத்து பள்ளிகளுக்கும், ஆய்வுக்கூட கருவிகள் வழங்கப்பட்டு விட்டன. பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிகளில், 'பார்சலை' பிரிக்காமலேயே பத்திரமாக பாதுகாக்கின்றனர். இரண்டு ஆண்டுகளாக, தொடர்ந்து ஆய்வுக்கூட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதால், இந்த பார்சல்களுக்கே தனி அறை தேவைப்படுகிறது. இந்த கல்வியாண்டிலாவது, 'லேப்' உபகரணங்கள் வழங்காமல், அதற்கான வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இவற்றை உபயோகப்படுத்தவும், மாணவ, மாணவியருக்கு பயனுள்ளதாகவும் அமையும்.