Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/எங்களை யாராலும் பிரிக்க முடியாது : சீனாவை "தாஜா' செய்கிறது பாகிஸ்தான்

எங்களை யாராலும் பிரிக்க முடியாது : சீனாவை "தாஜா' செய்கிறது பாகிஸ்தான்

எங்களை யாராலும் பிரிக்க முடியாது : சீனாவை "தாஜா' செய்கிறது பாகிஸ்தான்

எங்களை யாராலும் பிரிக்க முடியாது : சீனாவை "தாஜா' செய்கிறது பாகிஸ்தான்

ADDED : ஆக 20, 2011 09:57 PM


Google News
Latest Tamil News

பீஜிங் : 'ஷின்ஜியாங் மாகாணத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாதிகள் உள்ளனர்' என்ற சீனாவின் குற்றச்சாட்டை அடுத்து, அந்நாட்டைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் பாக்., இறங்கியுள்ளது.

'உய்குர் பயங்கரவாதிகளை சீனா எதிர்கொள்ள பாக்., எல்லா வகையிலும் உதவும்' என பாக்., தெரிவித்துள்ளது.

சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத் கான் இதுகுறித்து நேற்று கூறியதாவது: பாகிஸ்தானும், சீனாவும் நட்புறவில் பின்னிப் பிணைந்த நாடுகள். ஷின்ஜியாங்கில் சீனாவின் பாதுகாப்பு குலைந்தால் அது எங்களையும் பாதிக்கும். கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தை இரு நாடுகளும் தொடர்ந்து எதிர்க்கும். இந்த விஷயத்தில் இரு நாடுகளின் உறவும் பாறை போன்று இறுகியது. எந்த ஒரு சக்தியும், நாடும் எங்களைப் பிரிக்க முடியாது.

ஒருங்கிணைந்த எல்லை நிர்வாகம், சீனா, பாக்., ஆப்கன் எல்லை கடந்த பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இவை தவிர, காரகோரம் நெடுஞ்சாலை மேம்பாடு, தகவல் தொடர்புக்கான கண்ணாடி இழை (பைபர் ஆப்டிக்) பதிப்பு, கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைக் கொண்டு வருவதற்காக பூமிக்கடியில் குழாய் பதிப்பு, ரயில் தண்டவாளம் பதித்தல் மற்றும் வான்வழி ஏற்பாடுகள் செய்தல் ஆகிய பணிகளிலும் இணைந்து செயலாற்றி வருகிறோம். இவ்வாறு மசூத் கான் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us