/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/"வரலாறும் இலக்கியமும்' 3 நாள் கருத்துப் பயிலரங்கு"வரலாறும் இலக்கியமும்' 3 நாள் கருத்துப் பயிலரங்கு
"வரலாறும் இலக்கியமும்' 3 நாள் கருத்துப் பயிலரங்கு
"வரலாறும் இலக்கியமும்' 3 நாள் கருத்துப் பயிலரங்கு
"வரலாறும் இலக்கியமும்' 3 நாள் கருத்துப் பயிலரங்கு
ADDED : ஆக 11, 2011 02:55 AM
புதுச்சேரி:'வரலாறும் இலக்கியமும்' என்ற தலைப்பிலாலான 3 நாள் கருத்துப்
பயிலரங்கு நேற்று துவங்கியது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்
சங்கம், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து 'வரலாறும் -
இலக்கியமும்' என்ற தலைப்பில் 3 நாள் கருத்துப் பயிலரங்கை நடத்தின. இதன்
துவக்க விழா நேற்று ஆய்வு நிறுவன வளாகக் கருத்தரங்கில் நடந்தது.பேராசிரியர்
அருணன் வரவேற்றார். எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.
பேராசிரியர் சுப்பராயலு துவக்கவுரையாற்றினார். வரலாற்றுப் பேராசிரியர்
பணிக்கர் 'சமூக மாற்றத்தின் வரலாறே இலக்கியம்' என்ற தலைப்பில்
நோக்கவுரையாற்றினார்.
பேராசிரியர் ராஜன் 'சங்க இலக்கியமும், தொல்லியலும்' என்ற தலைப்பிலும்,
முனைவர் பூங்குன்றன் 'நடுகற்கள் - வரலாறும் இலக்கியமும்' என்ற தலைப்பிலும்,
பேராசிரியர் சுப்பராயலு 'சோழர்கால வரலாறும் இலக்கியமும்' என்ற
தலைப்பிலும், முனைவர் வேதாச்சலம் 'பாண்டியர் கால வரலாறும் இலக்கியமும்'
என்ற தலைப்பிலும் முதல் அமர்வில் கட்டுரைகளை வாசித்தனர். இரண்டாவது
அமர்வில், 'இந்திய வரலாற்றியலில் வட்டாரங்களும் அவற்றின் இலக்கியங்களும்'
என்ற தலைப்பில், முனைவர் ராமன் மகாதேவன், முனைவர் ரகுபதி, செந்தில்பாபு,
கீதா ஆகியோர் கட்டுரை வாசித்தனர். இன்றும், நாளையும் நடக்கும் அமர்வுகளில்
பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் உரையாற்றுகின்றனர்.விழா ஏற்பாடுகளை
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க துணைப் பொதுச் செயலாளர்
ராமச்சந்திரன் செய்தார்.