/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/விஸ்வநாதப்பேரி கோயிலில் கொடியேற்றம்விஸ்வநாதப்பேரி கோயிலில் கொடியேற்றம்
விஸ்வநாதப்பேரி கோயிலில் கொடியேற்றம்
விஸ்வநாதப்பேரி கோயிலில் கொடியேற்றம்
விஸ்வநாதப்பேரி கோயிலில் கொடியேற்றம்
ADDED : ஆக 01, 2011 02:06 AM
சிவகிரி : விஸ்வநாதப்பேரி திரவுபதியம்மன் கோயில் ஆடிமாத பூக்குழி திருவிழா இன்று (1ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விஸ்வநாதப்பேரி திரவுபதியம்மன் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாத பூக்குழி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா இன்று (1ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இன்று காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் மூலவர் உட்பட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் 18 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. பின் கொடிறேற்றப்படுகிறது. புளியங்குடி ஒருசொல் கிருஷ்ணசாமி குடும்பத்தினர் சார்பில் கொடியேற்று விழாவும், விஸ்வகர்ம சமுதாயம் சார்பில் இரவு 7 மணிக்கு மேல் சக்தி கும்பம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரும் 9ம் தேதி பூக்குழி நடக்கிறது.நாளை இரண்டாம் திருவிழா ராமசுப்பு நாயுடு சமுதாயம் சார்பிலும், மூன்றாம் திருநாள் வியாபாரிகள் சங்கத்தினர், நான்காம் திருவிழா நாயுடு சமுதாயம், 5ம் திருநாள் வணிக வைசிய சமுதாயம், 6ம் திருநாள் இல்லம்பிள்ளை சமுதாயம், 7ம் திருநாள் தேவர் சமுதாயம், 8ம் திருநாள் கோயில் மண்டபம், 9ம் திருநாள் சேனைத்தலைவர் சமுதாயம் சார்பிலும் நடக்கிறது.10ம் திருநாளன்று காப்பு கட்டிகள் சங்கத்தினர் சார்பில் மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலக அலுவலர் முருகேசன், எழுத்தர் பழனி, பூசாரி பழனிச்சாமி உட்பட ஆலய நிர்வாகிகள், அனைத்து சமுதாய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.