தெலுங்கானா விவகாரம்: மத்திய அரசுக்கே பொறுப்பு
தெலுங்கானா விவகாரம்: மத்திய அரசுக்கே பொறுப்பு
தெலுங்கானா விவகாரம்: மத்திய அரசுக்கே பொறுப்பு
ADDED : ஜூலை 30, 2011 04:30 AM
ஐதராபாத்: 'தெலுங்கானா விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய அரசுக்குத்தான் உள்ளது' என, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது: தெலுங்கானா தனி மாநில கோரிக்கை விவகாரத்தில், முடிவெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய அரசுக்கு உள்ளது.
தெலுங்குதேசம் கட்சியோ, மற்ற கட்சிகளோ, இதை வலியுறுத்த முடியாது. கடந்த மே மாதம் நடந்த எங்கள் கட்சியின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், தெலுங்கானா விவகாரம் குறித்த எங்களது நிலையை, தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம். அதில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மத்திய அரசு என்ன முடிவெடுக்க வேண்டும் என்று, நாங்கள் வலியுறுத்த மாட்டோம். மக்களின் எதிர்பார்ப்பிற்கும், விருப்பதிற்கும் ஏற்ப, முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் எங்கள் கட்சிக்கு உறுப்பினர்களும், தலைவர்களும் உள்ளனர். தனி மாநில கோரிக்கை விவகாரத்தை பொறுத்தவரை, எங்கள் கட்சியினரின் நிலை என்னவோ, அதுதான் எனது நிலையும். இதில், நான் எந்தவித தனிப்பட்ட கருத்தையும் கொண்டிருக்கவில்லை. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.