உத்தராகண்டில் வெள்ளம், நிலச்சரிவில் 17 பேர் பலி: 13 பேர் மாயம்
உத்தராகண்டில் வெள்ளம், நிலச்சரிவில் 17 பேர் பலி: 13 பேர் மாயம்
உத்தராகண்டில் வெள்ளம், நிலச்சரிவில் 17 பேர் பலி: 13 பேர் மாயம்
ADDED : செப் 17, 2025 07:58 AM

டேராடூன்: உத்தராகண்டில் வெள்ளம், நிலச்சரிவில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் மேகவெடிப்பு, நிலச்சரிவு, பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. உத்தராகண்டில் நேற்று மேகவெடிப்பால் அதிக மழை கொட்டியது. டேராடூன் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
டேராடூனில் கல்வி நிறுவன வளாகத்திற்குள் வெள்ளம் புகுந்தது. 200 குழந்தைகள் மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், பாலங்கள் மற்றும் அரசு சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் எட்டு மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய 120 பேர் மீட்கப்பட்டனர். ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு புதைந்தது. இருவர் மீட்கப்பட்டனர்; மூன்று பேர் உயிரிழந்தனர்.