/உள்ளூர் செய்திகள்/திருச்சி/காலி அரசு கட்டிடங்களை பயன்படுத்த வேண்டுகோள்காலி அரசு கட்டிடங்களை பயன்படுத்த வேண்டுகோள்
காலி அரசு கட்டிடங்களை பயன்படுத்த வேண்டுகோள்
காலி அரசு கட்டிடங்களை பயன்படுத்த வேண்டுகோள்
காலி அரசு கட்டிடங்களை பயன்படுத்த வேண்டுகோள்
ADDED : செப் 13, 2011 01:00 AM
குளித்தலை: 'குளித்தலை அருகே அய்யர்மலையில் பயன்பாட்டுக்கு வராத நல்ல அரசு கட்டடங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என எம்.எல்.ஏ., பாப்பாசுந்தரத்துக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை அருகே அய்யர்மலை பிரிவு சிவாயம் ரோடு அருகே குளித்தலை யூனியன் கட்டுப்பாட்டில் இருந்த கிராமப்புற காய்கறிகள் உற்பத்தி விற்பனையாளர்கள் சங்க கட்டடம், அய்யர்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் செயல்பட்ட சித்த மருத்துவமனை, குடும்ப கட்டுப்பாட்டு மருத்துவமனை கட்டிடம் ஆகிய மூன்று கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுக்கு மேலாக அரசு பயன்படுத்தப்படாத நிலையில் இருந்ததால் பகுதி மக்கள், லாரி டிரைவர்கள் சிலர் இரவு நேரங்களில் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு துறை நிலையில் பல வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் சூழ்நிலையில், நல்ல நிலையில் இருக்கும் கட்டிடத்தை அரசு நிறுவனங்கள் அய்யர்மலையில் பயன்பாட்டுக்கு இல்லாத மூன்று கட்டிடத்தில் இயங்கி பகுதி மக்களுக்கு பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ., பாப்பாசுந்தரத்துக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.