/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/மலேரியா-டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணிமலேரியா-டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
மலேரியா-டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
மலேரியா-டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
மலேரியா-டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 14, 2011 11:50 PM
அரியலூர்: அரியலூரில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
அரியலூர் மாவட்ட சுகாதாரதுறை சார்பில், அரியலூர் பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை பகுதியிலிருந்து புறப்பட்ட மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் அனு ஜார்ஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். அரியலூர் எம்.எல்.ஏ., துரை மணிவேல் முன்னிலை வகித்தார். சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மோகன் வரவேற்றார்.
கொசுவினால் பரவும் நோய்களான டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா, மலேரியா, யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துதல். டிரம், தொட்டியில் தண்ணீர் சேமித்து வைத்த பாத்திரத்தில், மூன்று நாட்களுக்கு மேல் தண்ணீரை பாதுகாத்து வைக்க கூடாது. உபயோகப்படுத்தப்படாத தேவையற்ற தண்ணீர் தேங்கும் பொருட்களை வீடு மற்றும் வீட்டு தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும். வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். உள்ளிட்ட விழிப்புணர்வு வாசங்களை கொண்ட பிரச்சார பேரணி, அரியலூர் அண்ணாதுரை சிலையிலிருந்து துவங்கி, மார்க்கெட் தெரு, தேரடி, வெள்ளாழதெரு, மேல அக்ரஹாரம் தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக, அரியலூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை சென்றடைந்தது. பேரணி துவக்க விழாவில் அரியலூர் ஆர்.டி.ஓ., ஸ்ரீதரன், தாசில்தார் முத்துவடிவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சங்கரவடிவேல், அரியலூர் வட்டார தலைமை மருத்துவர் டாக்டர் சண்முகம், மாவட்ட நலக்கல்வியாளர் அண்ணாதுரை, வட்டார சுகாதார புள்ளியியல் ஆய்வாளர் கோடீஸ்வரன் மற்றும் அரியலூர் அரசு மேல்நிலை பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, சி.எஸ்.ஐ., மேல்நிலை பள்ளிகளின் மாணவ, மாணவிகள், ஆர்.எஸ். பாரா மெடிக்கல் மற்றும் சயின்ஸ் இன்ஸ்ட்டியூட்டை சேர்ந்த மாணவிகள், சுகாதார மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.