/உள்ளூர் செய்திகள்/தேனி/சுகாதார பணியாளர் பற்றாக்குறை பள்ளிகளில் சுகாதாரம் கேள்விக்குறிசுகாதார பணியாளர் பற்றாக்குறை பள்ளிகளில் சுகாதாரம் கேள்விக்குறி
சுகாதார பணியாளர் பற்றாக்குறை பள்ளிகளில் சுகாதாரம் கேள்விக்குறி
சுகாதார பணியாளர் பற்றாக்குறை பள்ளிகளில் சுகாதாரம் கேள்விக்குறி
சுகாதார பணியாளர் பற்றாக்குறை பள்ளிகளில் சுகாதாரம் கேள்விக்குறி
ADDED : ஜூலை 29, 2011 11:12 PM
தேனி : சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
தமிழக அரசு கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்துவதில், அதிக அக்கறை காட்டி வருகிறது. பழுதடைந்த மகளிர் சுகாதார வளாகங்களை பழுது நீக்கி சீரமைக்க மூன்று மாதம் அவகாசம் அளித்துள்ளது. இதை தொடர்ந்து சுகாதார வளாகங்களை சீரமைப்பதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.மகளிர் சுகாதார வளாகங்களை போன்று அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் சுகாதாரம் மோசமாகி விட்டது. கழிப்பறைகள் பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மாணவர்கள் திறந்த வெளிகளை சிறுநீர் கழிப்பிடமாக்கி வருகின்றனர். 90 சதவீதம் அரசு பள்ளிகளில், துப்புரவு பணியாளர்களே இல்லாத நிலை உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 10 சதவீதம் துப்புரவு பணியாளர்களே உள்ளனர். இதனால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.பதவி உயர்வு: சில அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கனவே இருந்த துப்புரவு பணியாளர்களும், பதவி உயர்வு பெற்று அலுவலக உதவியாளர்களாக சென்று விட்டனர். அவர்கள் இடத்தில் புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பள்ளிகளில் மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.