/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் மாநகராட்சி அ.தி.மு.க., வேட்பாளர் மேயர் பதவிக்கு மனுசேலம் மாநகராட்சி அ.தி.மு.க., வேட்பாளர் மேயர் பதவிக்கு மனு
சேலம் மாநகராட்சி அ.தி.மு.க., வேட்பாளர் மேயர் பதவிக்கு மனு
சேலம் மாநகராட்சி அ.தி.மு.க., வேட்பாளர் மேயர் பதவிக்கு மனு
சேலம் மாநகராட்சி அ.தி.மு.க., வேட்பாளர் மேயர் பதவிக்கு மனு
சேலம்: சேலம் மாநகராட்சி தேர்தலில், மேயர் பதவிக்கு போட்டியிட, அ.தி.மு.க., வேட்பாளர் சவுண்டப்பன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவர்களுடன், அ.தி.மு.க., வை சேர்ந்த ஒரு சிலர் உள்ளே சென்றனர். கமிஷனர் அறைக்குள், 10 க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததால், 'ஐந்து பேருக்கு மேல் இருந்தால், என்னால் வேட்பு மனுவை பெற முடியாது. அதனால், ஒரு சிலரை வெளியேற்றுங்கள்' என்று கமிஷனர் லட்சுமிப்பிரியா, அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியிடம் கூறினார். அமைச்சர் கூறியதை தொடர்ந்து, உள்ளே இருந்த கட்சி நிர்வாகிகள் வெளியேறினர். பிறகு, சவுண்டப்பன், மாநகராட்சி கமிஷனர் லட்சுமிப்பிரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பிறகு, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எனக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டால், கிச்சிப்பாளையம் குப்பைமேடு பகுதியை முற்றிலும் அகற்றி, சுகாதாரத்தை மேம்படுத்துவேன். மாநகராட்சி பகுதியில், நிச்சயம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு கூறினார்.