/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/32 மணி நேர தொடர் யோகாசனம் ஆச்சார்யா பள்ளி மாணவன் சாதனை32 மணி நேர தொடர் யோகாசனம் ஆச்சார்யா பள்ளி மாணவன் சாதனை
32 மணி நேர தொடர் யோகாசனம் ஆச்சார்யா பள்ளி மாணவன் சாதனை
32 மணி நேர தொடர் யோகாசனம் ஆச்சார்யா பள்ளி மாணவன் சாதனை
32 மணி நேர தொடர் யோகாசனம் ஆச்சார்யா பள்ளி மாணவன் சாதனை
புதுச்சேரி : உலகிலேயே அதிக நேரம் யோகாசனம் செய்து ஆச்சார்யா பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி 9ம் வகுப்பு மாணவன் அருணாசலம் இடைவெளி இல்லாமல் யோகாசனம் செய்து அசத்தினான். பெரியவர்களே சிரமப்படும், கால பைரவ ஆசனம், சக்ரபந்த ஆசனம், ஏக பாத சிரசாசனங்களை அனைவரும் வியக்கும் வகையில் சுலபமாக செய்து காட்டினான். 32 மணிநேரம் கடும் முயற்சிக்கு பின் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு உலகிலேயே அதிக நேரம் யோகாசனம் செய்த ஆண் நபர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்தார். கடந்த 7ம் தேதி ஆச்சார்யா சிக்ஷா பள்ளி 10ம் வகுப்பு மாணவி அபிராமி தொடர்ச்சியாக 36 மணி நேரம் யோகாசனம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே அதிக நேரம் யோகாசனம் செய்து கின்னஸ் சாதனை படைத்த ஆச்சார்யா பள்ளி மாணவர்களை, ஆச்சார்யா கல்வி நிறுவனர் அரவிந்தன் உள்பட பலர் பாராட்டினர்.