/உள்ளூர் செய்திகள்/தேனி/அண்ணா மறுமலர்ச்சி நூலகங்களை நூலகத்துறையுடன் இணைக்க முடிவுஅண்ணா மறுமலர்ச்சி நூலகங்களை நூலகத்துறையுடன் இணைக்க முடிவு
அண்ணா மறுமலர்ச்சி நூலகங்களை நூலகத்துறையுடன் இணைக்க முடிவு
அண்ணா மறுமலர்ச்சி நூலகங்களை நூலகத்துறையுடன் இணைக்க முடிவு
அண்ணா மறுமலர்ச்சி நூலகங்களை நூலகத்துறையுடன் இணைக்க முடிவு
ADDED : செப் 11, 2011 11:21 PM
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களை, நூலகத் துறையுடன் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் கிராம ஊராட்சிகளில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நூலகங்கள் திறக்கப்பட்டன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிதி உதவி பெற்று, இவை செயல்பட்டன. இதனால் ,நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. பல கிராமங்களில், நூலகங்கள் செயல்படாததால், இவற்றை மாவட்ட நூலகத்துறையுடன் இணைக்க, அரசு முடிவு செய்துள்ளது. அண்ணாதுரை பிறந்த நாளில் இதற்கான அறிவிப்பு வெளியாகும், என எதிர்பார்க்கப்படுகிறது.
நமது சிறப்பு நிருபர்