ADDED : ஜூலை 13, 2011 01:56 AM
உடுமலை : உடுமலை அருகே கொங்கல்நகரம் ஆக்ஸ்போர்டு பள்ளியில், திருப்பூர்
மாவட்ட தீயணைப்புத்துறை கோட்ட அலுவலர் சத்ய நாராயணன் உத்தரவின்படி,
திருப்பூர் தீ தடுப்புக்குழுவினர் நாகராஜன் தலைமையில், மாணவர்களுக்கு தீ
தடுப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.
தீ தடுப்பு மற்றும் எண்ணெய் தீ
விபத்து, மின்சார தீ விபத்து குறித்து செயல்முறை மூலமாக விளக்கமளித்தனர்.
தீயணைப்பான் கருவிகள் உபயோகிக்கும் முறை குறித்தும் விளக்கப்பட்டது.