Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/முதல்வர் முடிவெடுக்காததால் கூடங்குளம் தொடர்கதை : 2,000 மெகாவாட் மின்சாரம் எப்போது வரும்?

முதல்வர் முடிவெடுக்காததால் கூடங்குளம் தொடர்கதை : 2,000 மெகாவாட் மின்சாரம் எப்போது வரும்?

முதல்வர் முடிவெடுக்காததால் கூடங்குளம் தொடர்கதை : 2,000 மெகாவாட் மின்சாரம் எப்போது வரும்?

முதல்வர் முடிவெடுக்காததால் கூடங்குளம் தொடர்கதை : 2,000 மெகாவாட் மின்சாரம் எப்போது வரும்?

ADDED : அக் 13, 2011 10:39 PM


Google News
Latest Tamil News
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையம் கட்டும் போது, 10 ஆண்டுகளாக எழாத பயம், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து கட்டி முடிக்கும் தருணத்தில் எழுந்துள்ளதை, கண்டித்து வலுவான முடிவை முதல்வர் எடுக்காதது ஏமாற்றத்தை தந்து உள்ளது. இதனால், அக்டோபர் மாதமே துவங்க வேண்டிய முதல் கட்ட சோதனை உற்பத்தி டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணியாளர்களை விரட்டியடிப்பது போன்ற சட்ட விரோதமான நடைவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், மேலும் பணிகளில் தாமதம் ஏற்படலாம். மின்வெட்டினால் அவதிப்படும் தமிழகதிற்கு கூடங்குளம் பெரிய நிவர்த்தியை அளிக்கும் வகையில் உள்ளது, இதனையும், நிபுணர்கள் கருத்தையும் எடுத்துக்கொள்ளாமல் அரசியல் ரீதியாக பிரச்சனையை தமிழக அரசு கையாண்டு வருவது, மக்கள் இடையே பெறும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கூடங்குளம் அணுமின் திட்ட கட்டுமானப் பணிகள் 2001ல் துவங்கப்பட்டது. இந்த ஆண்டு அக்டோபரில் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி பணிகள் முடியாததால், டிசம்பர் மாதத்துக்கு மின் உற்பத்தியை ஒத்திவைத்துள்ளனர். ஆனால், உள்ளூர் மக்கள் அணுமின் நிலையத்துக்கு எதிராக தொடர்ந்துள்ள போராட்டம் பெரும் நெருக்கடியை திட்டத்துக்கு உருவாக்கியுள்ளது.

பொதுமக்கள் நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் முதல்கட்டமாக துவங்கிய போராட்டம், முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மன்மோகன் ஆகியோர், அணுமின் நிலையத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என, அளித்த வாக்குறுதியால் கைவிடப்பட்டது.

பாதுகாப்புக்கு உறுதியளித்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபற்றி, பிரதமருக்கு முதல்வர் கடிதமும் எழுதினார். இதற்கு பதில் அளித்து பிரதமர், முதல்வருக்கும் கடிதம் எழுதினார்.

முதல்வர் மற்றும் பிரதமரின் வாக்குறுதிகள் பொதுமக்களை திருப்தியடைய செய்யவில்லை. அணுமின் நிலையத்தை மூடினால் மட்டுமே, போராட்டத்தைக் கைவிடுவோம் என, அறிவித்து மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடியில் நேற்று செய்த முதல்வர் ஜெயலலிதா, கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில், உள்ளூர் மக்களின் கருத்துக்கு மதிப்பு அளித்து செயல்படுவேன் என, கூறியுள்ளார்.

அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், அணு மின் நிலையத்தால் பாதிப்பு ஏற்படாது. அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் எடுத்துள்ளோம். மக்கள் அச்சப்பட தேவையில்லை என, மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது.

தமிழக அரசோ, எந்த முடிவையும் எடுக்கத் தயங்குகிறது. மத்திய அரசின் உறுதியை ஏற்று, அணுமின் நிலையம் செயல்பட ஒத்துழைப்பு அளிப்பதா, இல்லை உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, அணு மின் நிலையத்தை மூட வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்துவதா என்பதில் முடிவு எடுக்க முடியாமல் உள்ளது.

உள்ளூர் பகுதியில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதாலும், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டி உள்ளதாலும், உள்ளூர் மக்களின் கருத்துக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று பொதுவாகக் கூறிவருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us