ADDED : செப் 23, 2011 11:19 PM
விருதுநகர் : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு , தேர்தல் விதி முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் ,ரேஷன் விண்ணப்பங்கள் பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் அக். 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்பட உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடும் போது தேர்தல் விதி முறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி , ''புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பங்கள் பெற கூடாது, தயார் செய்த ரேஷன் கார்டுகளை பயனாளிகளுக்கு வழங்க கூடாது,'' என ,அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் ,உணவு பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது.