/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பிரசவ வலியுடன் மனு தாக்கல் வேட்பாளருக்கு உடனடி பிரசவம்பிரசவ வலியுடன் மனு தாக்கல் வேட்பாளருக்கு உடனடி பிரசவம்
பிரசவ வலியுடன் மனு தாக்கல் வேட்பாளருக்கு உடனடி பிரசவம்
பிரசவ வலியுடன் மனு தாக்கல் வேட்பாளருக்கு உடனடி பிரசவம்
பிரசவ வலியுடன் மனு தாக்கல் வேட்பாளருக்கு உடனடி பிரசவம்
ADDED : செப் 30, 2011 01:40 AM
விழுப்புரம் : விக்கிரவாண்டி பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு மனு தாக்கல் செய்த 2 மணி நேரத்தில் பெண் வேட்பாளருக்கு குழந்தை பிறந்தது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்தவர் பூபாலன். நகர ம.தி.மு.க., தொண்டர் படை அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி பிரியா,28. நிறை மாத கர்ப்பிணியான இவர் ம.தி.மு.க., சார்பில் 10 வது வார்டில் போட்டியிடுகிறார். நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்தில் பிரியா மனு தாக்கல் செய்ய வந்தவுடன் பிரசவ வலி ஏற்பட்டது. கூட்டம் நிரம்பி வழிந்ததால் போலீசார் உதவியுடன் பிரியா உடனடியாக மனுதாக்கல் செய்தார். பிரியாவை ம.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் பாபு ஜீவானந்தம் காரில் ஏற்றி புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு 2.50 மணிக்கு பிரியாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. வேட்பு மனு தாக்கல் செய்த அன்றே பெண் குழந்தை பிறந்ததால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.