ADDED : ஆக 17, 2011 01:16 PM
உடுமலை: முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.1600 கோடி மோசடி செய்த, பாசி நிறுவனத்தின் இயக்குநர் மோகன்ராஜிடம் சி.பி.ஐ., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் அருகே பாசி என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார் மோகன்ராஜ். இங்கு முதலீடு செய்பவர்களின் பணம் இரட்டிப்பாக தருவதாக பாசி நிறுவனம் அறிவித்தது. இதனை நம்பி கிட்டத்தட்ட 90ஆயிரம் முதலீடு செய்தனர். ஆனால் முதலீடு செய்தவர்கள் யாருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை. இதனையடுத்து அந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாசி நிறுவனத்தின் இயக்குநர் மோகன்ராஜிடம், சி.பி.ஐ., போலீசார் விசாரித்து வருகி்ன்றனர்.


