/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பட்டாசு ஆலையில் ஆய்வு : 81 ஆலையில் விதி மீறல்பட்டாசு ஆலையில் ஆய்வு : 81 ஆலையில் விதி மீறல்
பட்டாசு ஆலையில் ஆய்வு : 81 ஆலையில் விதி மீறல்
பட்டாசு ஆலையில் ஆய்வு : 81 ஆலையில் விதி மீறல்
பட்டாசு ஆலையில் ஆய்வு : 81 ஆலையில் விதி மீறல்
ADDED : செப் 08, 2011 10:39 PM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 87 பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தியதில், 81 ஆலைகளில் விதி மீறல் கண்டறியப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு ஆலைகளில் உற்பத்தி தீவிரப்படுத்தப்படும். இந்த நேரத்தில் பட்டாசு ஆலைகளில் விதி மீறல்கள் அதிகரிக்கும். வருவாய்துறை, தீயணைப்புத்துறை, தொழிற்சாலைகள் ஆய்வுத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஆக. 27 முதல், 87 பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தினர். 81 ஆலைகளில் விதி மீறல் கண்டறியப்பட்டது. 3 ஆலைகளுக்கு நிரந்தர உற்பத்தி தடை, 33 ஆலைகள் மீது மூன்று நாள் உற்பத்தி தடை, 45 ஆலைகளுக்கு காரணம் கேட்கப்பட்டுள்ளது. ''விதி மீறல் செய்யும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கலெக்டர் மு.பாலாஜி தெரிவித்துள்ளார்.