கருணை மனுக்கள் நிராகரிப்பு: ஜெயலலிதாவுக்கு வைகோ கோரிக்கை
கருணை மனுக்கள் நிராகரிப்பு: ஜெயலலிதாவுக்கு வைகோ கோரிக்கை
கருணை மனுக்கள் நிராகரிப்பு: ஜெயலலிதாவுக்கு வைகோ கோரிக்கை
ADDED : ஆக 13, 2011 04:01 PM
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, மூன்று பேரது கருணை மனுக்களை ஜனாதிபதி தள்ளுபடி செய்துவிட்ட போதிலும், தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. இதனை மத்திய அரசு செய்ய வேண்டும். முன்பு இது போல் நடந்து உள்ளது. மனிதாபிமான நடவடிக்கையாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்று பேரது தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.