/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/குறித்த நேரத்தில் பஸ் இல்லை எஸ்.குளம் பொதுமக்கள் அவதிகுறித்த நேரத்தில் பஸ் இல்லை எஸ்.குளம் பொதுமக்கள் அவதி
குறித்த நேரத்தில் பஸ் இல்லை எஸ்.குளம் பொதுமக்கள் அவதி
குறித்த நேரத்தில் பஸ் இல்லை எஸ்.குளம் பொதுமக்கள் அவதி
குறித்த நேரத்தில் பஸ் இல்லை எஸ்.குளம் பொதுமக்கள் அவதி
ADDED : செப் 11, 2011 11:15 PM
கடலாடி : கடலாடி அருகே மேலச்சிறுபோது ஊராட்சியை சேர்ந்தது எஸ்.குளம் கிராமம்.
இங்கிருந்து முதுகுளத்தூர், சிக்கல் பகுதிகளுக்கு 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட 100 பேர் வந்து செல்கின்றனர். மாலை 3.50 மணிக்கு முதுகுளத்தூருக்கும், சிக்கல் பகுதிக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து 5.45 மணிக்கு தான் பஸ். மாலை 4 மணிக்கு பள்ளி விட்டு வரும் எஸ்.குளம் பகுதி மாணவர்கள் ஒன்றரை மணிநேரம் இரு ஊர்களின் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்க வேண்டி உள்ளது. வீடு திரும்ப இரவு 7 மணியாகிவிடுகிறது. களைப்படைந்த நிலையில் வீட்டு பாடங்களை எழுதி, அன்றைய பாடங்களை படித்து முடித்து தூங்க இரவு 11 மணி ஆகிவிடுகிறது. எனவே, மாலையில் 4.30 மணிக்கு முதுகுளத்தூருக்கும், சிக்கல் பகுதிக்கும் பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.