Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நாளை நவராத்திரி ஆறாம் நாள்

நாளை நவராத்திரி ஆறாம் நாள்

நாளை நவராத்திரி ஆறாம் நாள்

நாளை நவராத்திரி ஆறாம் நாள்

ADDED : அக் 01, 2011 11:45 PM


Google News
Latest Tamil News

நவராத்திரியின் ஆறாம் நாளான நாளை, அம்பிகையை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும்.

இவளை 'கவுமாரி' என்றும், 'குமார கண நாதம்பா' என்றும் அழைப்பர். இவள் பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள். நாளை மீனாட்சியம்மன் திருமணஞ்சேரி பார்வதி திருக்கல்யாணம் கோலத்தில் காட்சி

தருகிறாள். கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 27 கி.மீ., தூரத்திலுள்ள சிவத்தலம் திருமணஞ்சேரி. இங்குள்ள அம்பிகை, முனிவர்கள் செய்த யாகத்தீயில் இருந்து அவதரித்தாள். வீணை ஓசையை விட இனிய குரல்வளம் கொண்டவளாக இருப்பதால் 'யாழின் மென்மொழியம்மை' என்று பெயர் பெற்றாள். இங்குள்ள சிவன் 'கல்யாண சுந்தரர்' எனப்படுகிறார். மதுரையும் திருமண ஷேத்திரமே. ஒரு

திருமண ÷க்ஷத்திரத்தில், இன்னொரு திருமண ஷேத்திரத்தைக் காண இருக்கும் நாம் கொடுத்து வைத்தவர்கள்.



கன்னிப்பெண்கள் திருமணஞ்சேரி செல்லாமலேயே, தங்களுக்கு தகுந்த மணாளன் வேண்டி, சென்று வரலாம். திருமணமானவர்கள் மாங்கல்ய பாக்கியம் வேண்டி செல்லலாம்.

திருமணஞ்சேரியிலுள்ள மூலவரை 'அருள்வள்ளல்நாதர்' என்பர். ஆம்..அருள் வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே. கருவுற்றிருந்த இருபெண்கள், பிறக்கும் குழந்தைகளின் மூலம் எதிர்காலத்தில் சம்பந்திகளாக வாழ்வது என்று தங்களுக்குள் உறுதி செய்து கொண்டனர். அதில் ஒருத்திக்கு பெண் குழந்தையும், மற்றொருத்திக்கு ஆமையும் பிறந்தது. அந்த ஆமை,திருமணஞ்சேரி இறைவனை வழிபட்டு ஆமையுருவம் நீங்கி, ஆணுருவம் பெற்றது. பின்பு அந்த இளைஞன், நிச்சயித்த பெண்ணையே திருமணம் செய்து மகிழ்ந்தான். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவராலும் பாடல் பெற்ற சிறப்பு உடையது.



இத்தனை பெருமை பெற்ற திருமணஞ்சேரிக்குச் சென்று வந்த புண்ணியத்தைப் பெற மக்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் நாளை வாய்க்கிறது. திருக்கல்யாணத்திற்குப் பெயர் பெற்ற மதுரை மீனாட்சியை திருமணஞ்சேரி கல்யாண அலங்காரத்தில் கண்டு களிப்போம். நாளைய நைவேத்யம்: வெண்பொங்கல்பாடவேண்டிய பாடல்:விடையானை மேலுலகும் ஏழுமிப் பாரெல்லாம்உடையானை ஊழி தோறூழி உளதாயபடையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரிஅடைவானை யடைய வல்லார்க்கு இல்லை அல்லலே.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us